குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் நடைபெற்று வருகிறது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் அர்ணவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதில் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமாரும் ஒருவர். இவர் நடிகை சுஜாவருணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுஜாவருணியும் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கணவர் சிவக்குமார் குறித்து சுஜா வருணி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்புள்ள அத்தான், நல்ல காலம் இறுதியாக உதயமாகிறது. இது உங்கள் தருணம், உங்கள் மேடை மற்றும் உங்கள் கூட்டம். நீங்கள் ராக் ஸ்டாரை போன்று எப்படி உற்சாகப்படுத்துவது என உங்களுக்கு எப்போதும் தெரியும்.
இதையும் படிங்க: 8 வயது சிறுவன் ஏமாத்திட்டான்.! அடையார் சிக்னலில் நடந்த ஷாக் சம்பவம்.! குமுறிய நடிகை நிவேதா பெத்துராஜ்!!
எனக்கும், குடும்பத்திற்கும் நீங்கள் ஏற்கனவே ஹீரோவாகி விட்டீர்கள். இப்போது அதனை மற்ற அனைவரும் பார்க்க வேண்டிய நேரம். இந்த பயணத்தில் உங்களது அனைத்து திறமைகளையும் வெளி கொண்டு வந்து ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கவும. பல மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி உண்மையிலேயே நீங்கள் யார் என இந்த உலகிற்கு காட்டுங்கள் என கூறியுள்ளார். மேலும் பல கருத்துக்களை பகிர்ந்த அவர் இறுதியில் தனது கணவருக்கு வாக்களித்து ஆதரவளிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பிக் பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரி இவர்கள்தான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!