மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மன அழுத்தத்திற்கு சிகிச்சை! மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நடிகை ஸ்ரீநிதி செய்த அதிர்ச்சி காரியம்!!
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் சில பிரபல சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி. அண்மைக்காலமாக சர்ச்சையைக் கிளப்பி வரும் அவர் வலிமை படத்தை விமர்சனம் செய்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார். பின்னர் அவர் நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாகவும், அவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பைக் கிளப்பினார்.
அதுமட்டுமின்றி அவர் தனது நெருங்கிய தோழியும், யாரடி நீ மோகினி சீரியல் நடிகையுமான நக்ஷத்ரா திருமணம் செய்துகொள்ளவிருப்பவர் மிகவும் மோசமானவர், அவர்கள் நக்ஷத்ராவை மிரட்டி வைத்துள்ளனர். நக்ஷத்ரா அந்த நபரை திருமணம் செய்து கொண்டால்
விஜே சித்ராவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவளுக்கும் வரும் என கூறினார். இது பரபரப்பை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து நக்ஷத்ரா, ஸ்ரீநிதி கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாலே இவ்வாறு பேசுகிறார். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சந்தோசமாக இருக்கிறேன் என விளக்கம் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீநிதி மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெறுவதற்காக புழல் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையும் நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரீநிதி மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்றதாகவும், அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றியதாகவும் தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.