திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த டிரஸ்லயும் நீ அழகுதான்மா.! செம சிம்பிளாக ரசிகர்களை சொக்கவைத்த நடிகை ஐஸ்வர்யா தத்தா!!
தமிழில் நகுல் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இப்படத்தில் அவர் கல்லூரி மாணவியாக, மிகவும் ஹோம்லியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பாயும் புலி, சத்ரியன், ஆச்சாரம், ஆறாது சினம் என சில படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் ஐஸ்வர்யா எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவரது சில எல்லை மீறிய செயல்களால் ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். மேலும் அவர் ராட்சச ராணி எனவும் அழைக்கப்பட்டார்.
ஐஸ்வர்யா தத்தா சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இந்த நிலையில் அவர் தற்போது மிகவும் சிம்பிளாக வளைச்சு வளைச்சு போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.