மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. உடல் எடையை குறைத்து, செம ஸ்மார்ட்டாக இருக்கும் அஜித் குமார்! நீங்க பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் நாயகனாக வலம் வருபவர் அஜித் குமார். இவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடுவர்.
அஜித் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதைத் தொடர்ந்து அஜித் மீண்டும் மூன்றாவது முறையாக போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத்துடன் கூட்டணியில் இணைந்து AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்காக அவர் தனது உடல் எடையை குறைத்துள்ளாராம். இந்நிலையில் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு மே 1 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் உடல் எடையை குறைத்து நடிகர் அஜித்குமார் செம ஸ்மார்ட்டாக உள்ளார். அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.