திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. அருந்ததி படத்தில் நடித்த குட்டிபொண்ணா இது.! ஆளே மாறி இப்போ எப்படியிருக்காங்க பார்த்தீங்களா.!
கடந்த 2009-ஆம் ஆண்டு அனுஷ்காவின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அருந்ததி. தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தப் படத்தில் நடிகை அனுஷ்கா பார்ப்போர் வியக்கும்வகையில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
சிறுவயது ஜக்கம்மா
அருந்ததி திரைப்படம் வெளிவந்த அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடி சூப்பர் ஹிட்டானது. மேலும் இந்தப் படம் 70 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிறுவயது அனுஷ்காவாக, ஜக்கம்மாவாக செம கெத்தாக, மிரட்டலாக நடித்து பிரபலமானவர் திவ்யா நாகேஷ்.
இதையும் படிங்க: அட.. ஜேஜே பட நடிகையா இது! இப்போ எப்படியிருக்கார் பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!
லேட்டஸ்ட் புகைப்படம்
இவர் அருந்ததி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தெலுங்கு சினிமாவின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விருதினை பெற்றார். இவர் தமிழ், தெலுங்கு மொழியில் 40 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் சில படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளாராம். இந்த நிலையில் திவ்யா நாகேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் அருந்ததி படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அட.. ஷாஜஹான் பட நடிகையா இது.! இப்போ எப்படி இருக்காங்க பார்த்தீங்களா!! சர்ப்ரைஸ் புகைப்படங்கள்!!