திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
"இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை" - அப்படி என்ன இருக்கிறது அந்த ட்ரெய்லரில்

நடிகர் விக்ராந்த் மற்றும் வசுந்தரா ஆகியோர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இந்தப் படத்தை ‘யா யா’ படத்தை தயாரித்த முருகராஜ் என்பவர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை ஜெகதீசன் என்பவர் இயக்கி வருகிறார்.
நடுத்தர விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் நடிகர் விக்ராந்த். இவர் விவசாயம் செய்வதைப் பெருமையாக நினைக்கக்கூடியவர். கஷ்டமான சூழ்நிலையிலும் இவர் விவசாயத்தை கைவிடமாட்டார்.
அவரது வாழ்க்கையில் திடீரென ஒரு ஒட்டகம் குறுக்கிடுகிறது. அந்த ஒட்டகத்தால் அவர் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஒட்டகத்தினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் பக்ரீத். இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.