"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
நிர்வாணமா போஸ் கொடுங்க.. நாங்க இருக்கோம் உங்களுக்கு.. ரன்வீருக்கு அழைப்பு விடுத்த பீட்டா..! காரணம் இதுதானா?.!

விலங்குகள் நலனை முன்னிறுத்தும் "டிரை வேகன்" பிரச்சாரத்திற்காக ரன்வீர் சிங்கை நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி பீட்டா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக தனது புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இதற்கு இந்திய அளவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சில முற்போக்காளர்கள் அது அவரின் உடல், அவரின் உடலை வெளியில் எப்படி காண்பிக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் எந்த தவறும் இல்லை என்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் உலகளவில் உள்ள சில கவர்ச்சி மாடல்களும் இதுகுறித்த ஆதரவை ரன்வீர் சிங்க்கு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் விலங்குகள் நல அமைப்பான பீட்டா, விலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்வாணமாக போஸ் கொடுக்க ரன்வீருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
முன் பீட்டா அமைப்போடு அனுஷ்கா சர்மா, கார்த்திக் ஆர்யன் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அந்த வரிசையில் ரன்வீர் சிங்கும் விரைவில் இணைய இருப்பதாக தெரியவருகிறது. விலங்குகளை உணவிற்காக கொலை செய்யாமல் அதனை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துக்களை முன் நிறுத்தி, இந்த பிரச்சாரம் அமைய உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும் நிர்வாணமாக நடிக்க ரன்வீர் சிங்கிடம் கேட்டுக்கொண்டதாக பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பீட்டா அமைப்பின் இந்திய துணைத்தலைவர் சச்சின் பங்கெரா தெரிவிக்கையில், ரன்வீர் சிங் எங்களின் இதழுக்கு பொருத்தமாக இருப்பார். இதனால் அவரை தேர்வு செய்துள்ளோம்.
மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் ரத்தம், சதை, எலும்பு போன்றவை உள்ளன. விலங்குகளுக்கும் உணர்ச்சிகள் மற்றும் தனித்துவகுணங்கள் உள்ளன. விலங்குகளும் வலியை உணரும். அவை குடும்பமாக கூட்டத்துடன் வாழ விரும்பும். அவை மரணிக்க விரும்புவதில்லை என்று தெரிவித்தார்.