மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்... ராயன் இசை வெளியீட்டு விழா எப்போது.? ரசிகர்களுக்கு தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ்.!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர் கதையாசிரியர் மற்றும் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவராக சினிமா துறையில் விளங்கி வருகிறார். இவரது 50-வது திரைப்படத்தை அவரே இயக்கி நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
ராயன்
நடிகர் தனுஷ் தனது 50-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் தனுஷ், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே சூர்யா மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.
இசை வெளியீட்டு விழா
தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ராயன் திரைப்படம் வருகின்ற 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 5 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் அடங்காத அசுரன் என்ற பாடல் கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 5-ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: வெங்கட் பிரபுவுக்கு செக் மேட் வைத்த சிவகார்த்திகேயன்.!! கோட் ரிலீஸ்-க்கு பிறகு கூட்டணி உறுதியாகுமா.?
வெற்றிக்கொடிக்கட்டுமா ராயன்
ஜனவரி மாதம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் ராயன் திரைப்படம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தனுஷ். மேலும் இந்தத் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெளியான 2 பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்தத் திரைப்படம் தனுஷ் கேரியரில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வாவ்... காத்திருக்கும் பிரம்மாண்டம்.!! இந்தியன் 2 விழாவில் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.!!