அடேங்கப்பா.. பிக்பாஸ் தாமரையை பார்த்தீங்களா.! ஃபாரின் கேர்ள் மாதிரி செம ஸ்டைலாக இருக்காரே!!



bigboss-thamarai-latest-photos-viral

பல மேடை நிகழ்ச்சிகளில் நாடக கலைஞராக கலந்து கொண்டு பிரபலமாக இருந்தவர் தாமரை. தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியில்  ஒளிபரப்பான பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அறியாத அவர் பின்னர் நன்கு புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடி கடுமையான போட்டியாளராக டப் கொடுத்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் பிக்பாஸ் அல்டிமேட், பிக்பாஸ் ஜோடிகள் 2 போன்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும் Mr& Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கணவருடன் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். மேலும் அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் கிராமத்து உடையில்  வலம் வந்த தாமரை தற்போது செம மாடர்னாக மாறியுள்ளார். அவர் அவ்வப்போது மாடர்ன் உடையில், கணவருடன் டூர் சென்ற புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்வார். அவர் தற்போது ஊதா உடையில், கூலிங் கிளாஸ், பூட்ஸ் என பாரின் கேர்ள் போல உள்ள போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நடிகர் அஜித்துக்கு கிடைத்த மாபெரும் கெளரவம்.! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து!!


இதையும் படிங்க: சிம்புவின் அடுத்த 3 படங்கள் என்ன? வெளியாகிறது முக்கிய அப்டேட்.. விபரம் உள்ளே.!