"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!

அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் கதாபாத்திரத்தை சமூக வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்து இருந்தனர். அந்த விமர்சனங்களுக்கு தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் நடிகை திரிஷா பதிலடி கொடுத்திருக்கிறார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குட் பேட் அக்லி
ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார் திரிஷா எஸ் ஜே சூர்யா மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பொதுவாக வருடத்திற்கு ஒரு படம் என நடித்துக் கொண்டிருந்த அஜித் இந்த வருடத்தில் 2 படங்களில் நடித்திருந்தார். அந்த இரண்டு படங்களும் ஒரே வருடத்தில் ரிலீஸ் ஆனதால் தல ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
த்ரிஷா மீது விமர்சனம்
இந்தத் திரைப்படத்தில் அஜித் குமாரின் கதாபாத்திரத்தை கொண்டாடி வரும் ரசிகர்கள் நடிகை திரிஷாவின் கதாபாத்திரத்தை சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களிடம் எதிர்மறையான வரவேற்பு பெற்று இருக்கிறது. இதனால் சமூக வலைதளவாசிகள் நடிகை திரிஷாவிற்கு எதிராக மிகவும் மோசமான மற்றும் கீழ்த்தரமான விமர்சனங்களை சோசியல் மீடியாக்களில் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் தன் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் த்ரிஷா.
இதையும் படிங்க: ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலடி
தன் மீதான விமர்சனம் தொடர்பாக பதிலடி கொடுத்திருக்கும் த்ரிஷா, "விஷம மனிதர்களே, உங்களால் எப்படி நிம்மதியாக தூங்க முடிகிறது.? சமூக வலைதளங்களில் இருந்து கொண்டு மற்றவர்களை மோசமாக விமர்சனம் செய்வது உங்களது நாளை சிறப்பாக மாற்றுகிறதா.? உங்களையும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. உங்களுக்கென அடையாளம் இல்லாத கோழைகள் நீங்கள். உங்கள் எல்லோரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என கடுமையாக பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!