மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்க நிற உடையில் தங்கமாக ஜொலிக்கும் ஆலியா பட்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!?
பாலிவுட் திரைத்துறையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஆலியா பட். இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஆலியா பட் முதன் முதலில் கரன்ஜோகர் இயக்கத்தில் வெளியான 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர்' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படத்திற்குப் பின்பு பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். குறிப்பாக 'கங்குபாய் கத்தியாவாடி' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்றுள்ளார். இப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாகவும், பின் அந்த பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு தலைவியாகவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இதுபோன்ற நிலையில், சமீபத்தில் நடந்த அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்டின் திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற விழாவில் பல நடிகை, நடிகர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆலியா பட்டும் அவருடைய கணவரும் கலந்து கொண்டு இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வந்தனர்.
மேலும் ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்க நிற உடையில் ஜொலிஜொலிப்பாக போட்டோ எடுத்து அதனை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆலியா பட் மற்றும் ரன்வீர் கபூர் இருவரையும் ரசித்து கமெண்ட் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.