பாட்டில் ராதா படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் நாளை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!



Bottle Radha Movie Naa Naa kudikaran Song Out on Tomorrow 

 

தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், நடிகர்கள் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி, பரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி. குமார், கே.எஸ். கருணா பிரசாத், மாலதி அசோக் நவின், சுஹாசினி சஞ்சீவ், சிரஞ்சீவி, ஓவியர் சௌ. செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், அனீஷா, மாதவி ராஜ், கலா குமார் (ஜெய பெருமாள்), அன்பரசி, சேகர் நாராயணா உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் பாட்டில் ராதா. 

ரஞ்சித் தயாரிப்பு

இப்படத்தை டி.என்.அருண்பாலாஜி & பா.ரஞ்சித் ஆகியோர் தயாரித்து வழங்கி இருக்கின்றனர். படத்தின் இசையமைப்பு பணிகளை சியான் ரோல்டன் மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவுகளை பணிகளை ரூபேஷ் ஷாஜியும், இ.சங்கத்தமிழன் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: முதலிரவுல பல்லாங்குழி விளையாடுவாயா? வரவேற்பை பெரும் SSHHH வெப் சீரிஸ்.! 

பாடல் வெளியீடு

குடியை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம், 20 டிசம்பர் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, படத்தில் இடப்பெற்ற நா நா குடிகாரன் என்ற பாடல் ஒன்று நாளை மாலை 5 மணியளவில் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சித்தார்த்தின் மிஸ் யு திரைப்படம் வெளியீடு தேதி; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!