சித்தார்த்தின் மிஸ் யு திரைப்படம் வெளியீடு தேதி; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



Actor Siddhardh Miss You Movie Release date on 13 Dec 2024 

 

நடிகர்கள் சித்தார்த், ஆஷிகா ரங்கநாதன், பால சவரணன், ஜெயப்ரகாஷ், பொன்வண்ணன், கருணாகரன் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மிஸ் யு (Miss You). 

பல ஆண்டுகளுக்கு பின்பு சித்தார்த் கதாநாயகனாக, காதல் தொடர்பான படத்தில் நடித்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!

இப்படத்தை 7 எம்பிஎஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கிய நிலையில், தமிழ்நாட்டில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியீடு செய்கிறது. விரைவில் படம் அமேசான் தளத்திலும் வெளியாகிறது. 

சில வாரங்கள் முன்னதாகவே படம் வெளியாகவிருந்த நிலையில் மழை உட்பட பல்வேறு காரணத்தால் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், படக்குழு 13 டிசம்பர் 2024 அன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இதையும் படிங்க: அடுத்தடுத்த படங்களுக்கு ரெடியா? கோவை சூர்யா ரசிகர்கள் செய்த போஸ்டர் சம்பவம்.!