திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீட்டைச்சுற்றி தேங்கிய வெள்ளம்.. வெளியேறிய நடிகர் ஸ்ரீமன்..!
தனது வீட்டில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், வேறொரு வீட்டிற்கு செல்வதாக நடிகர் ஸ்ரீமன் கூறினார்.
சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. மாநகரம் & புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒருசில தாழ்வான இடங்களில் வெள்ளம் சாலைகளில் தேங்குகிறது. சென்னை நகரில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ளம் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளதால், பலரும் பாலங்களில் கார்களை நிறுத்தி வைக்க தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
கோடம்பாக்கம் வீட்டில் இருந்து வெளியேற்றம்
தாழ்வான இடங்களில் இருப்போர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நடிகர் ஸ்ரீமன் கோடம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனது வீட்டில் இருந்து வெளியேறினார். தனது வீட்டில் நீர் தேங்கத் தொடங்கிய காரணத்தால், அவர் தனது கோடம்பாக்கம் வீட்டில் இருந்து வெளியேறி, வேறொரு வீட்டிற்கு செல்கிறார்.
வெளுத்து வாங்கும் கனமழை... வீட்டை காலி செய்தார் நடிகர் ஸ்ரீமன்#Chennai #HeavyRainFall #ChennaiRains #RedAlert #WeatherUpdateWithNewsTamil #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/IbD1y7voJF
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) October 15, 2024
பணிகளை துரிதப்படுத்த கோரிக்கை
ஒருநாளில் பெய்த மழையே 20 நாட்கள் பெய்யும் அளவு இருக்கிறது. இதனால் யாரையும் நாம் குறைகூட முடியாது. தற்போது நடக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நகரம் முழுவதும் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. அதற்கான நாட்கள் கட்டாயம் பிடிக்கும். அந்த பணிகளை துரிதப்படுத்தினால் நல்லது. அடுத்த ஆண்டாவது நீர் தேங்காமல் இருந்தால் மகிழ்ச்சியே என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வந்தே பாரத் இரயிலில் தரமற்ற உணவுகள் விநியோகம்; நடிகர் பார்த்தீபன் குற்றச்சாட்டு.!