மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எல்லாவற்றையும் சோசியல் மீடியாவில் போடுவேன்" பிக் பாஸ் ரச்சிதாவை மிரட்டும் இயக்குனர்.!? என்ன நடந்தது.!?
சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதன் பிறகு ஒரு சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவ்வாறு சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் ரச்சிதா மகாலட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட பிக்பாஸில் கலந்து கொண்டு பல மக்களின் பாராட்டையும் பெற்றார்.
இது போன்ற நிலையில் ஜே எஸ் கே சதீஷ் என்பவரின் இயக்கத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்த ஃபயர் என்ற திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது. இதன்படி இப்படத்தை குறித்து பல சர்ச்சையான விஷயங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. குறிப்பாக ஃபயர் திரைப்படத்தில் ரச்சிதா மகாலட்சுமி கவர்ச்சியாக நடித்துள்ளார். அப்புகைப்படத்தை இயக்குனர் ஜே எஸ் கே சதீஷ் அவரது இணைய பக்கத்தில் ரச்சிதா மகாலட்சுமியின் பிறந்தநாள் அன்று வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பட வாய்ப்புக்காக பிக்பாஸ் பூர்ணிமா ரவி செய்த செயல்.? திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!?
இயக்குனர் ஜே எஸ் கே சதீஷ் அவர்களின் இப்பதிவு, ரச்சிதா மகாலட்சுமியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீரியல்களிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் குடும்ப குத்து விளக்காக இருந்து வந்த ரச்சிதாவா இது என்று பல ரசிகர்கள் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வந்தனர். இதனை அடுத்து ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அதைக் குறித்து அதிருப்தியை தெரிவிக்கும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை ரச்சிதாவை மிரட்டும் இயக்குநர்
இதற்கு பதிலடி கொடுத்த ஜே எஸ் கே சதீஷ், " நீங்க நடித்ததை தான் உங்க பிறந்தநாள் அன்று பதிவிட்டேன். நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடலை. நீங்கள் இந்த படத்தில் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம், மற்ற ஆதாரம் எல்லாம் என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் எல்லாவற்றையும் சோசியல் மீடியாவில் போடுவேன்" என்று மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். இப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: படுக்கையறை காட்சிக்கு தயார்.! ஆனால், நடிகை அனுபமா பரமேஸ்வரனின் பிடிவாதம்.!?