திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நயன்தாரா Vs தனுஷ் விவகாரம்.. தனுஷுக்கு பெருகும் ஆதரவு., பரபரப்பு காரணம்.!
இந்திய அளவில் பிரபலமான திரைப்பட நடிகையாகவும், மூத்த தமிழ் நடிகையாகவும் இருப்பவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர்ஸ்டார் என்றும் ரசிகர்களால் அறியப்படுகிறார். நானும் ரௌடி தான் படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு, 2022ல் திருமணம் செய்து, தற்போது 2 குழந்தைகளுடன் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் திருமணம் மற்றும் நயன்தாராவின் பயோபிக் தொடர்பான காட்சிகள், வெளியீடு உரிமை என்பது நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்து, நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் ஆவணப்படம் இம்மாதம் வெளியாகிறது.
இதனிடையே, இன்று நடிகை நயன்தாரா பதிவு செய்த இன்ஸ்டாகிராம் பதிவில், நடிகர் தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில், எங்களின் ஆவணப்படுத்தில், நானும் ரௌடிதான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பதிவு செய்ய முடியவில்லை.
இதையும் படிங்க: போதைப்பொருள் விவகாரம்; சுந்தரி சீரியல் நடிகை மீனா கைது.!
The famous USA distributor @varusath2003 explained the actual scenario why Dhanush was not given NOC! pic.twitter.com/JnDGbldQlP
— Game of Dreams💭🏆 (@Game_Of_Dreams) November 16, 2024
அவற்றுக்கு தனுஷ் காப்புரிமை கேட்கிறார். நாங்கள் நீண்ட நாட்கள் காத்திருந்தும் பலன் இல்லை. இதனால் அந்த காட்சிகளை விடுத்து, பிற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3 நொடி காட்சிக்கு 10 கோடி கேட்கிறார். திரைப்பட ஆடியோ லாஞ்சில் ரசிகர்களை சிலாகிக்க வசனங்களை பேசிவிட்டு, பொதுவாழ்வில் இப்படி இருக்கிறார் என தனது கண்டனத்துடன் கூடிய அறிக்கையை வெளியிட்டு இருந்தார். நயனுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் தனுஷின் ஆதரவாளர்கள் பெயரில், அவருக்கும் ஆதரவு கூடுகிறது. அதாவது, நீங்கள் (நயன்தாரா) உங்களின் ஆவணப்படம், திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ்க்கு விற்பனை செய்தது சரி எனில், ஒரு தயாரிப்பாளராக தனுஷ் நடந்து கொள்வதும் சரியே என கூறிவருகின்றனர்.
தனுஷின் ஆதரவாளர் ட்விட்:
#IStandwithDHANUSH ☝️
— Game of Dreams💭🏆 (@Game_Of_Dreams) November 16, 2024
It's a pure victim card by 9 ! 🚨
As a producer, #Dhanush has the right to decline their request because everyone knows what happened during the #NaanumRowdyDhaan movie period! 1/3 🧵 pic.twitter.com/c13TypkF3T
இதையும் படிங்க: மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?