மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதைப்பொருள் விவகாரம்; சுந்தரி சீரியல் நடிகை மீனா கைது.!
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தலைமையில், போதைப்பொருள் தடுப்பு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான விவகாரத்தில், தந்தையின் கைதுக்கு பின்னர் மௌஸியா என்ற 25 வயது இளம்பெண், போதைப்பொருள் விற்பனை விவகாரத்தை கையில் எடுத்து செயல்படுத்தும் தெரியவந்தது. இவருடன் 5 பேர் கும்பலும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
துணை நடிகை மீனா
இந்நிலையில், துணை நடிகையான மீனா, மெத்தப்பட்டமைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சுந்தரி தொலைக்காட்சித் தொடரிலும், டெடி திரைப்படத்திலும் நடித்திருந்த நடிகை மீனாவிடம் இருந்து 5 கிராம் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
திரை நட்சத்திரங்களுக்கு தொடர்பா?
தனது சொந்த பயன்பாட்டுக்கு போதைப்பொருளை வாங்கிய நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அண்ணா சாலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், திரைப்பட நட்சத்திரத்திற்கு போதைப்பொருள் சப்லை செய்யப்பட்டதா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!