PSBB பள்ளியின் அலட்சியத்தால் தனது மகனை பறிகொடுத்த பிரபல இயக்குனர்! 9 ஆண்டுகளுக்கு பின் பரவும் பகீர் தகவல்!!
சென்னை கேகே நகரில் பத்மா சேஷாத்ரி என்ற சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. தற்போது கொரோனா காரணமாக பள்ளி மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பள்ளியில் கணக்குபதிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின் போது, அரைகுறை ஆடையுடன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஆபாசமாக மெசேஜ் செய்தாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு எதிராகவும், இதுகுறித்து முன்பே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளிக்கு எதிராகவும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பிரபல இயக்குனரின் மகன் உயிரிழந்த சம்பவம் தற்போது மீண்டும் பேசும் பொருளாகியுள்ளது.
அதாவது தமிழில் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனரும், நடிகருமான மனோகரின் மகன் ரஞ்சன். அவர் PSBB பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ரஞ்சன் பள்ளியில் நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்டபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மேலும் மனோகர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பயிற்சியாளர் டீ குடிக்க சென்றதாகவும், அவரது அலட்சியத்தால் ரஞ்சன் உயிரிழந்து விட்டார் எனவும் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த பயிற்சியாளர் மீது போலீசார் நடவடிக்கையும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் உலாவி வருகிறது.