திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Good Bad Ugly: குட் பேட் அக்லீ படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியீடு.!
தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி என மெகாஹிட் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது நடிகர் அஜித் குமாருடன் குட் பேட் அக்லீ என்ற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இபபடத்தை வழங்குகிறது.
தேவிஸ்ரீ பிரசாத் இசையில், அபிநந்தன் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் படம் உருவாகி வருகிறது. 2025 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: "காந்திவழியில நீங்க, நேதாஜி வழியில நான்" - அனல் பறக்கும் வசனத்துடன், ஆக்சன் காட்சிகள்.. இந்தியன் 2 ட்ரைலர் இதோ.!
முக்கிய அப்டேட் இன்று வெளியீடு
நடிகர் அஜித்தின் 63வது திரைப்படமான இப்படத்தை ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து வருகின்றனர். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில், குட் பேட் அக்லீ படத்தின் முக்கிய அப்டேட், இன்று மாலை 6.40 மணியளவில் வெளியாகுவதாக, நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது படத்தின் இரண்டாவது போஸ்டர் அல்லது கிலிம்ப்ஸ் விடியோவாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Today 6. 40 , GBU 2
— Suresh Chandra (@SureshChandraa) June 27, 2024
இதையும் படிங்க: கூலி... சூப்பர் ஸ்டாருக்காக லோகேஷ் போட்ட திட்டம்.!! வெளியான சுவாரஸ்யமான தகவல்.!!