மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கூலி... சூப்பர் ஸ்டாருக்காக லோகேஷ் போட்ட திட்டம்.!! வெளியான சுவாரஸ்யமான தகவல்.!!
தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக முடிசூடா மன்னனாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார் .
லோகேஷ் - சூப்பர் ஸ்டார் கூட்டணி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்தத் திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளிவந்தது. இந்தத் திரைப்படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்க இருக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சூப்பர் ஸ்டாருக்காக லோகேஷன் திட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வயதிலும் சுறுசுறுப்புடன் உடலை வருத்தி நடித்து வருகிறார். அவர் இறுதியாக நடித்த ஜெய்லர் திரைப்படத்திலும் அதிகமான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தன . தற்போது நடந்து முடிந்த வேட்டையன் படத்திலும் அதிகமான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. எனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு கூலி படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் என்ற இரண்டு இடங்களில் மட்டுமே நடத்தி முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார். ரஜினிகாந்தின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவர் எடுத்த இந்த முடிவு சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
இதையும் படிங்க: "ஒரே அப்பார்ட்மெண்டில் விஜய் & த்ரிஷா."? உண்மையான காரணம் இதுதான்.!!
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் மாநகரம் மற்றும் கைதி திரைப்படங்களின் வெற்றியால் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவரது இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரானார். லோகேஷ் எப்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவார் என தமிழ் சினிமா உலகமே காத்திருந்தது. தற்போது அதற்கான வாய்ப்பு அமைந்திருப்பதால் சூப்பர் ஸ்டார் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு அனைத்து ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ஷாக்... இந்தியன் 2 திரைப்படத்தில் 'மிஸ்' ஆகும் முக்கிய கேரக்டர்.!! இயக்குனர் சங்கர் பகிர்ந்த தகவல்.!!