திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"காந்திவழியில நீங்க, நேதாஜி வழியில நான்" - அனல் பறக்கும் வசனத்துடன், ஆக்சன் காட்சிகள்.. இந்தியன் 2 ட்ரைலர் இதோ.!
இந்தியன் படத்துக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாராகி, தற்போது திரைக்கு வருகிறது. நீண்ட எதிர்பார்ப்புகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின், 12 ஜூலை 2024 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரியவருகிறது.
ஷங்கரின் இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபி சிம்ஹா உட்பட பலரும் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2 (Indian 2). லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில், அனிரூத் இசையில் படம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ஷாக்... இந்தியன் 2 திரைப்படத்தில் 'மிஸ்' ஆகும் முக்கிய கேரக்டர்.!! இயக்குனர் சங்கர் பகிர்ந்த தகவல்.!!
ஜூலையில் வெளியீடு உறுதி:
படத்தின் இசை வெளியீடு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, ட்ரைலர் எப்போது வெளியாகும்? என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அந்த வகையில், படம் கட்டாயம் ஜூலையில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
ட்ரைலர் இதோ
இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதிரடி காட்சிகள் கொண்ட அட்டகாசமான நகர்வுகளுடன் வெளியாகியுள்ள ட்ரைலர் வாயிலாக, படம் ஜூலை 2024 ல் வெளியாகுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகிறது.
SENAPATHY is back in style! 🤞🏻🤩 The much-awaited #Indian2 🇮🇳 Trailer is OUT NOW, packed with breathtaking action and visuals that will keep you hooked. 🔥
— Lyca Productions (@LycaProductions) June 25, 2024
▶️ https://t.co/pBf1FfzJsv@IndianTheMovie 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial… pic.twitter.com/qVtSTcDVs6
ட்ரைலர்
இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் கதறல்ஸ் பாடல் இன்று வெளியீடு; விபரம் உள்ளே.!