வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
வசூல் மழையில் நனையும் ஜோ திரைப்படம்.! குவியும் பாராட்டுக்கள்.!
பிரபல நடிகரான ரியோ ராஜ் நடிப்பில் ஹரிஹரன் ராம் எஸ் இயக்கத்தில், உருவாக்கப்பட்ட திரைப்படம் ஜோ இந்த திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி வெளியானது. தற்சமயம் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சித்து குமார் ,இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கே.ஜி. விக்னேஷ் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த திரைப்படத்தில், லலிதா பாய், பிரவீனா, கெவின், விக்னேஷ் கண்ணா, ஏகன் அன்புதாசன், மாளவிகா மனோஜ், பாவ்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தான், இந்த திரைப்படம் கடந்த 5 நாட்களில் உலக அளவில் 4 முதல் 5 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.