உயிரை எடுக்கும் முதுகு வலி.. இந்த விஷயம் போதும்.. டாக்டரே தேவையில்லை.!



Everyday walking solution for back pain

முதுகு வலியை குறைக்கும் நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி செய்பவர்களிடம் நடத்திய ஆய்வு ஒன்றில் முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அதிகம் தேவைப்படுவது இல்லையாம். முதுகு வலி காரணமாக அவதிப்படும் நபர்கள், அன்றாடம் சற்று நேரம் நடை பயிற்சி மேற்கொண்டால், அது ஒரு நல்ல சிகிச்சையாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தசைகள் வலுவாகும்

இதற்கு என்ன காரணம் என்றால் உடல் தசைகளை இந்த நடைபயிற்சி வலுப்படுத்துகிறது. உடலின் Core என சொல்லப்படும் மையம் நன்றாக இயங்கும். இது உடலுக்கு சமமான அழுத்தத்தை கொடுக்கிறது. தசைகள் தளர்வாக இயங்கவும், முதுகெலும்புடன் தொடர்புடைய தசைகள் வலுவாகவும் நடை பயிற்சி மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக, தான் நடைபயிற்சி முதுகு வலியை தடுக்கிறது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 10 கிலோ வரை எடை குறைய உதவும் நீர்.. எப்படி பயன்படுத்துவது.?!

Back Pain

நடைப்பயிற்சி நேரம்

இவ்வாறு, முதுகு வலியை குறைக்கக்கூடிய நடைபயிற்சியை ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை மேற்கொள்ளலாம். தொடர்ந்து நடக்க உடலில் சக்தி இருந்தால் 30 நிமிடங்கள் வரை இந்த நடைபயிற்சியை நாம் மேற்கொள்ளலாம். நம் உடல் எந்த அளவிற்கு தாங்குகிறதோ அந்த அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக நடைபயிற்சியின் நேரத்தை அதிகரிக்க வேண்டும். ஒரே நாளில் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. கொஞ்சம் கொஞ்சம் பயிற்சி மேற்கொண்டு நடை பயிற்சி செய்யும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

நடக்கும்போது நம் உடலை நேர்கோட்டில் வைக்க வேண்டும். தளர்வாகவும் நிமிர்ந்தும் நடக்க வேண்டும். தரையை பார்த்து நடப்பது, முதுகை வளைத்து நடப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. இடுப்பு தசைகள் நிலையாக, நேராக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் பட்சத்தில் 5 நாட்களில் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். அன்றாடம் நடந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் நம் உடலில் சகிப்புத்தன்மை மற்றும் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி அதிகரிக்கும் இது மனநிலையை சீராக்கி உடல் ஹார்மோன்களை மகிழ்ச்சி படுத்தும். இதனால் மன ஆரோக்கியம் மேம்படுவதுடன் உடலின் பாதி வியாதிகள் காணாமல் போய்விடும்.

இதையும் படிங்க: இரவில் பால் குடித்தால் உடல்கெட்டு விடுமா.? மருத்துவர்கள் கூறுவது என்ன.?!