#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!



karate-master shihan-husseini Dies 

 

தமிழ் திரையுலகில் துணை நடிகராகவும், கராத்தே, வில்வித்தை போன்ற கலைகளின் பயிற்சியாளராகவும் இருப்பவர் ஷிகான் ஹுசைனி. வேலைக்காரன், பத்ரி, உன்னைச்சொல்லி குத்தமில்லை, காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய படத்திலும் நடித்திருந்தார்

மாஸ்டர் ஷிகான் இரத்த புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார். இதனிடையே, கடந்த ஒரு மாதமாகவே தொடர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார்.

இதையும் படிங்க: நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!

கடந்த 22 நாட்களுக்கு முன்னதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதி செய்யப்பட்டார். இந்நிலையில், ஷிகான் சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு 01:45 மணியளவில் உயிரிழந்தார்.

shihan husseini

உடல் உறுப்புக்கள் தானம்

அவரின் உடல் உறுப்புகளும் தானமாக அளிக்கப்படுகிறது. மேலும், மாஸ்டர் ஷிகான் பல சமூக சேவைகளையும் செய்தவர் என்பதால், அவர் வாழும் பகுதியில் பரிட்சயமான நபராக அறியப்படுகிறார். 

இதனால் பெசன்ட் நகரில் இருக்கும் வில்வித்தை சங்கத்தில் அவரின் டூயல் இன்று இரவு சுமார் 7 மணி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின் அவரது டூயல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

ஷிகனின் மறைவு அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கடவுளின் தேசத்தை காப்பாற்ற வருகிறான் லூசிபர்; மோகன்லாலின் எம்புரான் பட ட்ரைலர் வெளியீடு.. லிங்க் உள்ளே.!