வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
கோரதாண்டவமாடும் கொரோனா.! தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் மருத்துவமனையில் கவலைக்கிடம்!
திரைப்பட பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் பாரதிராஜாவின் துணை இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்கிவந்த தேன்மொழிதாஸ், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மிகவும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதி தீவிரமெடுத்து வருகிறது. இத்தகைய கொடூர தொற்றால் ஏராளமான திரைப்பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அடுத்தடுத்ததாக இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராகவும் , ஏ.ஆர். ரகுமானின் இசையமைப்பில் 50-க்கும் மேற்பட்ட பாடல்ககளை எழுதியவருமான தேன்மொழி தாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தேன்மொழி தாஸ் மீண்டு வர பலரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.