வாவ்.. கண் சிமிட்டாமல் சொக்கவைக்கும் கொள்ளை அழகில் கீர்த்தி சுரேஷ்.! மாஸ் காட்டும் மிஸ் இந்தியா டீசர் !



keerthi-suresh-miss-india-teaser-released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இவர் நடித்த நடிகையர்திலகம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து கூறினர்.

keerthi Suresh

மேலும் விஜய், விக்ரம், விஷால் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், சர்க்கார் படத்திற்கு பிறகு நீண்ட ஓய்வில்இருந்தார். 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது போனிகபூர் தயாரிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். மேலும் தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரநாத் என்பவர் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். ஹீரோயினை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு மிஸ் இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது.அப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.