"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
திடீர் மூச்சுதிணறல்.! கேஜிஎப் பட நடிகர் மரணம்.! சோகத்தில் திரையிலகினர் இரங்கல்!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளிவந்து உலகளவில் செம ஹிட்டான திரைப்படம் கேஜிஃப். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் பார்வையற்ற வயதானவராக நடித்து மக்களிடையே நன்கு பிரபலமானவர் கிருஷ்ணா ஜி ராவ்.
இவர் பல கன்னட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் துணை நடிகராக வலம் வந்த கிருஷ்ணா ஜி ராவ், அண்மையில் தெலுங்கில் கிருஷ்ணா குமார் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த 'நானோ நாராயணப்பா' என்ற காமெடி படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறியபட்டார்.
வயதான நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த கிருஷ்ணா ஜி ராவ்விற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.