மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ இதுதான் காரணம்.! ஒப்பனாக போட்டுடைத்த நடிகை கோவை சரளா.!
தமிழ் சினிமாவில் தனது அசத்தலான நடிப்பால், காமெடியால் தனக்கென தனிஇடத்தை தக்க வைத்துக்கொண்டு, ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கியவர் நடிகை மனோரமா. அவரைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது காமெடியால் அன்று முதல் இன்று வரை ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருபவர் கோவை சரளா.
சினிமா துறையை கலக்கும் கோவை சரளா
நடிகர்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலருடனும் இணைந்து இவர் செய்த காமெடி இன்றும் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 900 படங்களில் நடித்துள்ள கோவை சரளா சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். கோவை சரளாவுக்கு தற்போது 60 வயதாகிறது. ஆனாலும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே உள்ளார்.
இதையும் படிங்க: இப்போதைக்கு நோ திருமணம்.! ஆனாலும்.. தனுஷ் பட நடிகை செய்துள்ள அந்த விஷயம்.! ஷாக்கில் ரசிகர்கள்!!
திருமணம் செய்யாதது இதனால்தான்
இந்த நிலையில் தான் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என பேட்டி ஒன்றில் கோவை சரளா கூறியுள்ளார். அவர் கூறியதாவது, பிறக்கும் போது தனியாகதான் பிறக்கிறோம். இறக்கும் போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் தேவையில்லை என தோன்றியது. சுதந்திரமாக வாழ வேண்டும் என எண்ணியே திருமணம் செய்து கொள்ளவில்லை.
திருமணம் செய்து குழந்தை பெற்றுகொண்ட பல பெற்றோர்கள், அந்த குழந்தைகளால் கைவிடப்பட்டு இன்று தனியாகவே வாழ்க்கையை கடத்துகின்றனர். யாரையும் சார்ந்து வாழ எனக்கு பிடிக்கவில்லை என திருமணம் செய்து கொள்ளாதது குறித்து கோவை சரளா விளக்கமளித்துள்ளார்
இதையும் படிங்க: இப்போதான் கல்யாணமாச்சு.. அதுக்குள்ள விவாகரத்தா?? மனம் வருந்தி பேசிய ரோபோ சங்கர் மகள்!!