திரைப்பட பாடகியின் பேரில் ஆன்லைன் கேம் மோசடி; மக்களே நம்பாதீங்க.. உஷார்.!
தளபதி விஜய்யுமா.. பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகிய பிரபலங்கள்! அடேங்கப்பா.. யார் யாருனு பார்த்தீங்களா!!

திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை பல வருட போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார். இரு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை தவற விட்ட நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முற்பட்டபோது வந்தியதேவனாக நடித்த தளபதி விஜய்யை அணுகியுள்ளார். அவரும் ஓகே சொன்ன நிலையில் படப்பிடிப்பு தாமதமானதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் நிராகரித்து விட்டாராம்.
அவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நிலையில் அவரும் விலகிவிட்டாராம். அவரை தொடர்ந்து விஜய் சேதுபதி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, அனுஷ்கா, அமலா பால் , கீர்த்தி சுரேஷ், சிம்பு என பலரும் நடிக்க ஒப்புக்கொண்டு பின்பு கால்ஷீட் மற்றும் படப்பிடிப்பு தாமதம் போன்ற பிரச்சினைகளின் காரணமாக பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.