பிரபுதேவாவை காதலித்ததற்கான காரணம்.. நயன்தாரா சொன்ன விளக்கம்..! ரசிகர்கள் கோபம்.!?



nayanthara-openup-about-her-love-story

நயன்தாராவின் திரைபயணம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். முதலில் மலையாளத்தில் அறிமுகமான நயன்தாரா தற்போது தமிழ் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை பெற்றுள்ளார்.

nayanthara

காதலில் விழுந்த நயன்தாரா

இவ்வாறு தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வந்த நயன்தாரா, நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு தொடர்ந்து பல சர்ச்சைகளில் நயன்தாரா சிக்கி வருகிறார்.

இதையும் படிங்க: நயன்தாரா Vs தனுஷ் விவகாரம்.. தனுஷுக்கு பெருகும் ஆதரவு., பரபரப்பு காரணம்.!

பிரபு தேவாவை காதலித்தது ஏன்?

இதனை அடுத்து தற்போது இன்டர்நேஷனல் சேனலில் அனுப்பமா சோப்ரா என்பவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்டார். அங்கு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் நயன்தாரா பதில் அளித்தார். இதனை அடுத்து பிரபுதேவாவை காதலித்ததற்கான காரணத்தை நயன்தாராவிடம் கேள்வியாக கேட்கப்பட்டது. அப்போது நயன்தாரா கூறிய பதில் அனைவருக்கும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

நயன்தாரா கூறியதாவது, "நான் சினிமாவிற்கு வந்த புதிதில் சினிமாவில் பலரும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்வது, திருமணமானவரை காதலிப்பது போன்ற பல செயல்களில் ஈடுபட்டனர். அப்போது அதை பார்த்ததால் எனக்கு அது தவறு என்று தெரியவில்லை. அதனால்தான் பிரபுதேவாவை அவர் திருமணமானவர் என்று தெரிந்தும் காதலித்தேன்" என்று கூறியிருக்கிறார்.

nayanthara

ரசிகர்கள் கோபம்

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் நயன்தாராவை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், பிரபுதேவாவை பிடித்திருக்கிறது காதலித்தேன் என்று கூறியிருந்தால் கூட பரவாயில்லை, நயன்தாரா மீது தவறு இல்லை என்பது போலவே அவர் பேசுவது சரி இல்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சாய்ரா பானு இந்த காரணத்திற்காக தான் ஏ.ஆர் ரகுமானை பிரிந்தாரா.! அதிர்ச்சியில் திரையுலகம்.!?