வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
சாய்ரா பானு இந்த காரணத்திற்காக தான் ஏ.ஆர் ரகுமானை பிரிந்தாரா.! அதிர்ச்சியில் திரையுலகம்.!?
ஏ.ஆர் ரகுமானின் திரைப்பயணம்
தமிழ் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஏ. ஆர் ரகுமான் இவர் தமிழில் ரோஜா என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிந்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்படத்திற்கு பின்பு பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்து பல ஹிட் திரைப்படப் பாடல்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.
தனது தொடர் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இசையமைத்துள்ளார். இவ்வாறு திரைத்துறையில் வெற்றிவாகை சூடி வரும் ஏ. ஆர் ரகுமான் விவாகரத்து செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏ. ஆர் ரகுமானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக செய்தி இணையத்தில் வைரலானதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இதையும் படிங்க: குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!
குழந்தைகளை யார் கவனிப்பது?
இதுகுறித்து ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானுவின் வழக்கறிஞர், பிரபல யு ட்யூப் சேனலில் பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் இவர்களை குறித்து பல விஷயங்களை பேசியிருந்தார். இதில் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்தால் குழந்தைகளை கவனிப்பது யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. "அதற்கு இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அது குறித்து தற்போது என்னால் பேச முடியாது" என்று வக்கீல் கூறியுள்ளார்.
விவாகரத்துக்கு இது தான் காரணமா?
மேலும் விவாகரத்திற்கு பின்பு மிகப்பெரிய தொகை ஜீவனாம்சமாக சாய்ரா பானுவிற்கு கிடைக்கப் போவதாகவும், பணத்திற்காக தான் ஏ ஆர் ரகுமானை சாய்ரா பானு விவாகரத்து செய்ய போவதாகவும், இணையத்தில் கிசுகிசுத்து வந்தனர். இதற்கு பதிலளித்த வக்கீல், சாய்ரா பானு பணத்திற்கு ஆசைப்படும் நபர் அல்ல. ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானுவின் 29 வருட திருமண வாழ்க்கையில் அனைத்து விதமான கஷ்டம், சந்தோஷங்களை யோசித்து தான் இவர்கள் இந்த முடிவு எடுத்துள்ளார்கள் என்று தெளிவாக பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!