மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அது தேவையே இல்லை... விமர்சனத்திற்குள்ளான நடிகை நிகிலா விமல் கருத்து.! என்னதான் கூறியுள்ளார்!!
மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிகிலா விமல். அவர் தமிழில் வெற்றிவேல், தம்பி, கிடாரி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் அவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் போர் தொழில். சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
நிகிலா விமல் பேச்சு
அதனைத் தொடர்ந்து நிகிலா விமல் கைவசம் தற்போது மலையாளத்தில் இரு படங்கள் மற்றும் ஒரு தமிழ் படம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள் மட்டுமே படத்தில் இடம்பெற வேண்டும். சில படங்களில் பெண் கதாபாத்திரங்கள் தேவையில்லை. ஆவேஷம், மஞ்சுமெல் பாய்ஸ் படங்களை போன்று.
இதையும் படிங்க: அஜித்திற்காக அவரது மனைவி ஷாலினி செய்த செயல்.! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!?
பெண் கதாபாத்திரங்கள் தேவையில்லை
தேவையில்லாமல் பெண் கதாபாத்திரங்களை வைத்தால், கதையின் போக்கே மாறிவிடும். ஒரு படத்தில் தேவையில்லாத போது பெண் கதாபாத்திரங்களை வைப்பதற்கு பதிலாக வைக்காமல் இருப்பதே நல்லது எனக் கூறியுள்ளார். நடிகை நிகிலா விமலின் இந்த கருத்து வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள்.! கடுப்பான சைந்தவி பதிலடி.! வைரல் பதிவு!!