#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதல் முறையாக செம ஜிம் ஒர்கவுட் வீடீயோவை வெளியிட்ட நடிகை நிவேதா தாமஸ்! வீடியோ இதோ!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜ ராஜேஸ்வரி என்ற சிறுவர்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்துவைத்தவர் நடிகை நிவேதா தாமஸ். அதன் பின்னர் வேதாளம், மைடியர் பூதம் போன்ற தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் நிவேதா தாமஸ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர்.
விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தார். நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கு திரை உலகில் பயங்கர பிசியாக நடித்து வருகிறார் நிவேதா தாமஸ்.
இந்நிலையில் ஜிம்மில் ஒர்கவுட் செய்து அதை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை நடிகைகள் தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நிவேதா தாமஸ் ஜிம்மில் ஒர்கவுட் செய்வதை படமாக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது.