மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'ரெட்ட தல' படப்பிடிப்பு நிறைவு; பிரியாணி பரிமாறி மகிழ்ந்த அருண் விஜய்.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அருண் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான யானை, மிஷன் சேப்டர் 1 ஆகிய படங்கள் நல்ல வெற்றியை அடைந்தன. இயக்குனர் பாலாவுடன் இணைந்து உருவான வணங்கான் திரைப்படமும் விரைவில் திரைக்கு வருகிறது.
ரெட்ட தல திரைப்படம்
இதனிடையே, திருக்குமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் ரெட்ட தல (Retta Thala) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. படத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடிகையாக இருக்கிறார். சாம் சி.எஸ் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: யோகிபாபுவின் போட் திரைப்படம் ஓடிடி ரிலீஸ்; விபரம் உள்ளே.!
படப்பிடிப்பு நிறைவு
இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்றுடன் நிறைவுபெற்ற நிலையில், நடிகர் அருண் விஜய் படக்குழுவினருக்கு பிரியாணியை தனது கைகளால் பரிமாறினார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Arun Vijay’s #RettaThala Shoot Wrapped! pic.twitter.com/Wo2Pgktq5a
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 1, 2024
இதையும் படிங்க: பழனி பஞ்சாமிருதம் குறித்து அவதூறு; இயக்குனர் மோகன் ஜி-க்கு ஜாமின்; நிபந்தனையை ஆப்படித்த நீதிமன்றம் அதிரடி.!