மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னை பெருமைபடுத்திவிட்டான்.. செம ஹேப்பியாக தன் தம்பிக்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்!!
தமிழ் திரையுலகில் நடிகராகவும், நடன இயக்குனராகவும் கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் சினிமா மட்டுமின்றி ஏழை, எளிய மக்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரமம் நடத்தி பல உதவிகளை செய்து வருகிறார். அவர் தற்போது மாற்றம் என்ற அறக்கட்டளையை துவங்கி பல சேவைகளை செய்து வருகிறார்.
ஹீரோவான ராகவா லாரன்ஸ் தம்பி
ராகவா லாரன்ஸ்க்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது சகோதரர் எல்வின். இவர் காஞ்சனா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். எல்வின் புல்லட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை டைரி படத்தை இயக்கிய இன்னசி பாண்டியன் இயக்குகிறார்.
இதையும் படிங்க: அப்படியெல்லாம் சொல்லி கோர்த்துவிடாதீங்க.. அதுவே எனக்கு போதும்.! ராகவா லாரன்ஸ் விருப்பம்!
தம்பிக்கு கார் பரிசு
இந்தப் படத்தின் காட்சிகளை ராகவா லாரன்ஸ் அண்மையில் கண்டுள்ளார். அதனை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த அவர் தன் தம்பிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், இந்த ஸ்பெஷலான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் தம்பி நடித்த படத்தின் காட்சிகளை கண்டேன்.
அவனது நடிப்பை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு இந்த காரை பரிசாக அளிக்கிறேன். மேலும் சிறப்பாக நடித்து என்னை பெருமைப்படுத்தியதற்காக இந்த ஸ்பெஷல் முத்தத்தையும் பரிசளிக்கிறேன். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். எனது தம்பிக்கும் உங்களது ஆசிர்வாதம் தேவை என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
Hi friends and fans,
— Raghava Lawrence (@offl_Lawrence) May 31, 2024
I would like to share this special moment with you all. I saw my Brother @elviinvinu_off debut movie #Bullet and I’m so happy with his performance. This is my Gift for him and A special kiss for making me proud with his acting. My wishes to the entire team.… pic.twitter.com/6BX31ExBs0
இதையும் படிங்க: இதுதான் என்னுடைய கொள்கை.! அரசியல் என்ட்ரி குறித்து செம தெளிவாக நடிகர் ராகவா எடுத்துள்ள முடிவு!!