திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அப்படியெல்லாம் சொல்லி கோர்த்துவிடாதீங்க.. அதுவே எனக்கு போதும்.! ராகவா லாரன்ஸ் விருப்பம்!
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற அறக்கட்டளையின் மூலம் விவசாயிகளுக்கு உதவும் வகையில் டிராக்டர்கள் வழங்கி வருகிறார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் கிராமத்தில் டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விவசாயிகளுக்கு டிராக்டர்
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகர் ராகவா லாரன்சை கிராமத்தினர் மேளதாளம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் டிராக்டரை வழங்கியபோது அனைவரும் கருப்பு எம்.ஜி.ஆர் என கோஷமிட்டுள்ளனர். அப்பொழுது பேசிய அவர், நான் செய்யும் சேவைகள் மூலம் அனைவருக்கும் சேவை செய்யும் எண்ணம் தோன்றவேண்டும். அதுவே போதும். கருப்பு எம்.ஜி.ஆர் என்றெல்லாம் கூறி கோர்த்துவிடாதீங்க.
இதையும் படிங்க: இதுதான் என்னுடைய கொள்கை.! அரசியல் என்ட்ரி குறித்து செம தெளிவாக நடிகர் ராகவா எடுத்துள்ள முடிவு!!
கருப்பு எம். ஜி. ஆர்
செல்லும் இடத்தில் சில பேர் என்னை அன்னை தெரசா, கருப்பு எம்.ஜி.ஆர் சிலர் தெய்வம் என்றெல்லாம் அழைக்கிறார்கள். இதையெல்லாம் நான் இதயத்தில் வைத்துக் கொள்வேன்.தலையில் வைத்துக் கொள்ளமாட்டேன் என கூறியுள்ளார். மேலும் அவர், விவசாயம் வளர வேண்டும், ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். எங்களுடன் இணைந்து சேவை செய்ய விரும்புபவர்கள் மாற்றம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்த மனசுதான் சார் கடவுள்.! டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளருக்காக ராகவா லாரன்ஸ் செய்த காரியம்.! வைரல் வீடியோ!!