மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. பிக்பாஸ் ரைசாதானா இது! செம்ம கிளாமராக நீச்சல் குளத்தில் ஒரே மஜாதான்! வைரலாகும் குளுகுளு வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ரைசா தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் தனது சக போட்டியாளரும், நடிகருமான ஹரிஷ் கல்யாணுடன் 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ரைசா 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
ரைசா சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிக்கேத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது தனது தோழியுடன் கோவாவில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் செம ஜாலியாக எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.