திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினியின் வேட்டையன் ஷூட்டிங்.! படக்குழு கொடுத்த புதிய அப்டேட்!!
ஜெய்பீம் பட புகழ் இயக்குனர் டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். ரஜினியின் 170வது படமான இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
வேட்டையன் படப்பிடிப்பு
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மேலும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்டையன் படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தது.
இதையும் படிங்க: பேட்டியில் ரஜினியை அசிங்கப்படுத்திய பா ரஞ்சித்.? ரசிகர்கள் கொந்தளிப்பு.!?
ஷூட்டிங்கை நிறைவு செய்த ரஜினி
இந்நிலையில் படத்தில் ரஜினியின் அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து படக்குழு வழியனுப்பும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.தொடர்ந்து விரைவில் படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "எனக்கு உங்க மேல ஒரு கண்ணு" ரஜினி கூட நடிக்க மறுத்த காரணம் இதுதான்.? உண்மையை உடைத்த பெப்சி உமா.!?