திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"எனக்கு உங்க மேல ஒரு கண்ணு" ரஜினி கூட நடிக்க மறுத்த காரணம் இதுதான்.? உண்மையை உடைத்த பெப்சி உமா.!?
90களில் காலகட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் பெப்சி உமா. தனது அழகினாலும், பேச்சு திறமையினாலும் ரசிகர்களை கவர்ந்து இன்று வரை 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவர் முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதன் மூலம் உமா மகேஸ்வரி என்ற இவரது பெயர் பெப்சி உமா என்று மாறியது.
90களில் காலகட்டத்தில் முதன் முதலில் தொகுப்பாளராக பிரபலமடைந்த பெப்சி உமாவை ஆண்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கும் மிகவும் பிடிக்கும். இவருடன் ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என்று பலர் காத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. இவ்வாறு தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார்.
இதனை அடுத்து இவருக்கு சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அவற்றையெல்லாம் தட்டி கழித்து விட்டு சின்ன திரையில் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வந்தார். அப்படி பிரபல நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதாவது, "ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு இரண்டு முறை வந்தது. இதற்கு ரஜினியே நேரடியாக என்னிடம் ஃபோன் செய்து கேட்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். பின்பு அவர் உங்கள் அருகில் எந்த பிரபலம் இருந்தாலும் எனக்கு உங்க மேலதான் கண்ணு என்று ரஜினி கூறினார்" இவ்வாறு பெப்சி உமா பேட்டியில் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.