திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பேட்டியில் ரஜினியை அசிங்கப்படுத்திய பா ரஞ்சித்.? ரசிகர்கள் கொந்தளிப்பு.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் பா ரஞ்சித். இவர் தமிழில் முதன் முதலில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே பெரிதளவில் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இதன்பிறகு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார்.
தனது திரைப்படங்களின் மூலம் ஜாதி அரசியலை பேசுபவர் பா. ரஞ்சித். இவரின் மெட்ராஸ் திரைப்படத்தில் குறிப்பிட்ட ஜாதியின் அரசியலை பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவ்வாறு சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக இருந்து வந்த பா. ரஞ்சித் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி, காலா என்ற இரு திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இப்படங்களிலும் ஜாதி அரசியலின் மூலம் தனது கருத்தை மக்கள் மத்தியில் நிலைநாட்டி இருந்தார்.
இது போன்ற நிலையில் இயக்குனர் பா ரஞ்சித், தனக்கு வாய்ப்பு கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமானப்படுத்தி விட்டதாக கூறி ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பா ரஞ்சித்தை திட்டி தீர்த்து வருகின்றனர். அதாவது சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்பேட்டியில் அவர் பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இயக்குனர் ரஞ்சித் பேட்டியில் கலந்து கொண்ட போது தொகுப்பாளர் அவரிடம் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூலமாகவே தலித் ஜாதி அரசியலை திரைப்படங்களில் பேசியிருக்கிறீர்கள். மற்ற மொழி திரைப்படங்களில் இவ்வாறு பெரிய நடிகர்களை வைத்து பேச முடியாது" என்று கேட்டதற்கு பா ரஞ்சித் ரஜினியை பற்றி பேசும்போது ஏளனமாக சிரித்தார். இவ்வாறு இவரின் செயலுக்காக ரஜினி ரசிகர்கள் தற்போது இணையத்தில் கண்டனத்தை தெரிவித்து இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.