வாரிசு, புஷ்பா 2 திரைப்பட தயாரிப்பாளர் வீடு & அலுவலகங்களில் வருமான வரிச்சோதனை.!
ரம்யா பாண்டியனின் தம்பிய பாத்தீங்க.. ரம்யா பாண்டியனின் சகோதரி சுந்தரி பாண்டியனை பார்த்துளீர்களா? இதோ..
நடிகை ரம்யா பாண்டியனின் சகோதரி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் அதன்பிறகு ஆண் தேவதை படம் மூலம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி தொடர் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.
ஆனலும் அம்மணிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக படவாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த அவர் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு மேலும் பிரபலமாகிவந்தார்.
இந்நிலையில்தான் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு, இறுதி போட்டி வரை முன்னேறியுள்ளார் ரம்யா பாண்டியன். இந்த பிக்பாஸ் தொடரும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு நடிகை ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன் வந்து சமீபத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதேபோல் ரம்யா பாண்டியனுக்கு ஒரு அக்காவும் உள்ளார். அவரது பெயர் சுந்தரி பாண்டியன். இதுவரை அவரது புகைப்படம் இணையத்தில் பெரிதாக வெளிவராதநிலையில், தற்போது ரம்யா பாண்டியனின் அக்கா சுந்தரி பாண்டியனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.