நடிகர் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!



Actor Santhanam Starring DD Returns 2 Movie Firstlook Announcement 

 

தமிழ் திரைஉலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வந்த நடிகர் சந்தானம், சில ஆண்டுகளாகவே கதாநாயகனாக நடித்து வருகிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா?, தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஏ1 என சில படங்களில் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து தன்னை நாயகனாக உயர்த்தியவர், பிற படங்களில் அதனை கோட்டைவிட்டார். 

இதனிடையே, மீண்டும் காமெடி-கதாநாயகனாக கலக்க முடிவெடுத்துள்ள சந்தானம், ஆர்யாவுடன் இணைந்து படம் தயாரித்து நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

இதையும் படிங்க: மத கஜ ராஜா படத்தின் அசத்தல் கலாட்டா கிலிம்ப்ஸ்; வீடியோ உள்ளே.!

இந்நிலையில், ஆர்யாவின் தி ஷோ பீப்புள், நிகரி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து சந்தானத்தின் தில்லுக்கு துட்டு திரைப்பட பாணியிலுள்ள பேய்-காமெடி கலந்த கதை கொண்ட படத்தை தயாரித்து வழங்கவுள்ளது. இந்த படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். ஆர்யாவும் நடிப்பதாக கூர்பாடுகிறது. 

இந்த படத்தின் முதற்பார்வை புகைப்படம் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சந்தானமும் உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற மதகஜராஜா படத்தின் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!