"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
மகத் நாயகனாக நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் ஆசை பாடல்; லிங்க் உள்ளே.!

ஆர். பிரேம்நாத் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையில், நடிகர்கள் மகத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன், பாரதி ராஜா, விடிவி கணேஷ், ரவீனா ரவி, ராஜ் ஐயப்பா, ஸ்ரீஜா, விஜே ஆஷிக், அக்ஷதா, அத்வைத், அன்ஷிதா உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் காதலே காதலே (Kadhale Kadhale).
மங்காத்தா, சென்னை 600028 இரண்டாம் பாகம் உட்பட பல படங்களில், சிறிய அளவிலான கதாபத்திரங்களில் நடித்து, பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று மக்களிடம் அறிமுகம் பெற்ற நடிகர் மகத் ராகவேந்திரா, காதலே காதலே படத்தின் நாயகனாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜெயமுருகன் மரணம்; திரையுலகினர் சோகம்.!
ஆசை பாடல் வெளியீடு
இப்படத்தை ஸ்ரீ வாரி பிலிம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சுதர்சன் கோவிந்தராஜ், எடிட்டிங் பணிகளை தியாகு மேற்கொண்டு இருக்கின்றனர். படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆசை என்ற பாடல் வெளியாகியுள்ளது. வியன் புகழேந்தி வரிகளில், விஷால் சந்திரசேகர் குரலில் உருவாகியுள்ள இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
இதையும் படிங்க: சினிமாலதான் காமெடியன், நிஜத்துல பலே வில்லன்.. நடிகையின் பரபரப்பு குற்றசாட்டு.. ஊட்டியில் நடந்தது என்ன?.!