மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விளம்பர யுக்திக்காக ஓப்போ இந்தியாவின் புது முயற்சி.. ரன்பீர் கபூரை வச்சி செய்த நெட்டிசன்களுக்கு இறுதியில் ஷாக்கிங் ட்விஸ்ட்.!
பாலிவுட் நடிகரை செல்பி விவகாரத்தில் விமர்சித்த நெட்டிசன்களுக்கு பெரும் அதிர்ச்சியாக ஓப்போ நிறுவனம் விளம்பர யுக்தியை செயல்படுத்திய சம்பவம் அம்பலமாகியுள்ளது.
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றங்கள் தொடரும் என்பது பழமொழி. இன்றளவில் மக்களை ஏமாற்றும் விவகாரத்தில் பெரும்பங்கு வகிப்பது விளம்பரங்கள் தான்.
ஒரு பொருளை மக்களிடம் சந்தைப்படுத்தவும், அதனை வாங்க தூண்டவும் உபயோகம் செய்யப்படும் விளம்பரங்கள், அதன் சாதகத்தை அபரீதமாக எடுத்து காண்பித்து முன்பு ஒளிபரப்பு செய்யப்பட்டன.
ஆனால், இன்று மக்களை பிராங்க் செய்யும் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், விளம்பரத்திற்காக மக்களிடையே பரபரப்பை தூண்டிவிட்டு பிராங்க் ஓப்போ நிறுவனம் செய்த சம்பவம் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் பதிலாக தந்துள்ளது.
நேற்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தன்னிடம் செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை பிடுங்கி எறிந்த வீடியோ வெளியாகி கடுமையான கண்டனத்தை பெற்றது.
இந்த நிலையில், இன்று ஓப்போ நிறுவனம் தனது ஓப்போ ரெனோ 8டி மாடல் செல்போனை சந்தைப்படுத்த முயற்சித்தது அம்பலமாகியுள்ளது. தனது நிறுவன செல்போன் குறித்து மக்களிடையே விளம்பரத்தை ஏற்படுத்தவே, நடிகரை வைத்து அதனை சந்தைப்படுத்தியுள்ளது.
இந்தியாவை சிறந்த விற்பனை மையமாக தேர்வு செய்துள்ள செல்போன் நிறுவனங்கள், அதன் செல்போனை டெஸ்டிங் செய்வதை போல இந்தியர்களை பயன்படுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செல்போனின் தரம் வருவது இல்லை என்பதே இந்தியர்களின் ஆதங்க குரலாக இருக்கிறது.
Why did Ranbir throw a fan's phone?
— OPPO India (@OPPOIndia) January 28, 2023
Tweet #AStepAbove to reveal an exclusive footage.