மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரன்பீர் கபூரின் 'அனிமல்' திரைப்படம் ஓடிடி ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு.!
தெலுங்கில் விஜய்தேவர் கொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா தற்போது ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் இதுவரை மொத்தமாக 900 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் அனிமல் திரைப்படம் வரும் டிசம்பர் 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், ஓடிடி வெளியீட்டில் திரையரங்கில் நீக்கப்பட்ட காட்சிகள் இடம் பெறும் என கூறப்படுகிறது.