திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"என் மூஞ்சி நல்லா இல்லன்னு கண்ணாடி கூட பாக்க மாட்டேன்" இயக்குனர் செல்வராகவனின் மனம் வருந்திய பேட்டி..
செல்வராகவனின் திரைபயணம்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் செல்வராகவன். இவர் தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து தனுஷிற்கும், இயக்குனர் செல்வராகவனிற்க்கும் திரை பயணத்தில் மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்தது.
இப்படத்திற்குப் பின்பு பல ஹிட் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தனது இயக்கத்தினால் தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டியிருக்கிறார் செல்வராகவன். இயக்குனராக மட்டுமல்லாமல், நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்து வருகின்றன.
இதையும் படிங்க: ஐயோ.. இந்த உண்மை முன்பே தெரியலையே.! இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட பதிவு!! என்ன நடந்தது??
நடிகராக உயர்ந்த செல்வராகவன்
இவ்வாறு திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர் செல்வராகவன். தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு எப்போதும் ஆக்டிவான இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் செல்வராகவன் சமீபத்தில் யூ ட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். இப்பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
செல்வராகவனின் பேட்டி
செல்வராகவன் கூறியதாவது, "நான் சின்ன வயதில் என் முகம் நல்லா இல்லை என்று கண்ணாடியில் கூட பார்க்க மாட்டேன். என் அம்மாவிடம் கூறினால் உனக்கு என்னப்பா நீ அழகா தானே இருக்கிறாய் என்று கூறுவார். ஆனால் இப்போது ஒரு இயக்குனராக இருந்து நடிகனாக மாறி இருக்கும் நான் கண்ணாடியை தைரியமாக பார்க்கிறேன்" என்று கூறியிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை அளித்து வருகிறது.
இதையும் படிங்க: காமெடி நடிகர் ஜனகராஜை நியாபகமிருக்குதா.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.!?