திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐயோ.. இந்த உண்மை முன்பே தெரியலையே.! இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட பதிவு!! என்ன நடந்தது??
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் செல்வராகவன். அவர் தற்போது சினிமாதுறையில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் தனுஷின் அண்ணன் ஆவார். தனுஷ் ஹீரோவாக அறிமுகம் செய்ததே அவர்தான்.
மேலும் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அவதாரமெடுத்து பீஸ்ட்,சாணிக்காயிதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’ராயன்’ படத்திலும் அவர் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். ஏராளமான ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் அவ்வப்போது தத்துவமான கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.
ஐயோ ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள் 😎😎
— selvaraghavan (@selvaraghavan) April 30, 2024
இயக்குனர் செல்வராகவன் தற்போது வெளியிட்டுள்ள பதிவில்,ஐயோ ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.