மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்ளீஸ்.. எங்கள சேர்த்து வையுங்க.! நடிகர் சிம்பு வீட்டிற்கு முன் தர்ணாவில் ஈடுபட்ட பிரபல சீரியல் நடிகை!!
பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் சமீபகாலமாகவே சர்ச்சையில் சிக்கி வருகிறார். அண்மையில் கூட வலிமை படம் குறித்து விமர்சனம் தெரிவித்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது நடிகர் சிம்புவை திருமணம் செய்ய ரெடி என தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராமில், ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். நானும் சிம்புவும் மட்டும்தான் மீதம் இருப்போம் என தெரிவித்திருந்தார். அதற்கு ரசிகர், நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே? என கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்ரீநிதியும் நல்ல ஐடியாதான். ஆனால் எனக்கு என்று ஆள் இருக்கே என தெரிவித்திருந்தார்.
பின்னர் அவர் சிம்புவின் வீட்டின் முன்பு இருந்த புகைப்படத்தை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், என்னால நம்ப முடியவில்லை. எனக்காக சிங்கிளா இருந்துருக்காரு. பார்த்துட்டு இருக்குறவங்க எங்களை சேர்த்து வையுங்க.லேட்டாதான் புரிஞ்சது. இன்னோருத்தரை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராட்டம், லவ்வுக்கு போராட்டம் இல்லையா என கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், என் போனில் 4 சதவீதம்தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட் சிம்பு வேணும், நெக்ஸ்ட் தண்ணி வேணும். கோவமா இருக்காரு அவர மட்டும் புரிஞ்சிக்கணுமா? நம்மள புரிஞ்சிக்கமாட்டாரா? ப்ளீஸ் வாங்க என பதிவிட்டுள்ளார். அது பரபரப்பை கிளப்பியுள்ளது.