வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
அடேங்கப்பா.. விலையுயர்ந்த புதிய கார் வாங்கிய நடிகை ஷாலு ஷம்மு.! என்ன கார்? விலை எவ்ளோ தெரியுமா??
தமிழ் சினிமாவில் துவக்கத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் தசாவதாரம், கஞ்சிவரம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, பவுடர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து அவருக்கு சொல்லிக் கொள்ளுமளவிற்கு பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து அவ்வப்போது செம கிளாமராக தனது புகைப்படங்களை வெளியிடுவார். மேலும் பல விளம்பரங்களில் நடித்து வரும் அவர் அந்த விளம்பரங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதிகளவில் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடிகை ஷாலு ஷம்மு புதிதாக ஜாகுவார் ப்ரீமியம் கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டதாக மிகவும் மகிழ்ச்சியுடன் கார் வாங்கிய புகைப்படத்தை ஷாலு தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் வாங்கியுள்ள ஜாக்குவார் F Pace காரின் விலை சென்னையில் சுமார் ரூ. 45 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.