மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! தண்ணீருக்கு அடியில், மகனுடன் ஷில்பா ஷெட்டி செய்த காரியத்தை பார்த்தீர்களா.! இணையத்தை கலக்கும் வீடியோ இதோ!!
தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. மேலும் அவர் குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியினருக்கு வியான் என்ற ஒரு ஆண்குழந்தை உள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஷில்பா ஷெட்டி அடிக்கடி தனது புகைப்படங்கள், யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஷில்பா ஷெட்டி சற்று வித்தியாசமாக தனது மகன் வியானுடன் நீச்சல் குளத்தில், தண்ணீருக்கு அடியில் பயிற்சி அளிக்கும் வகையில் சில சாகசங்களை மேற்கொண்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.